தமிழர்:
"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்"
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை"
என்றெல்லாம் கூறிவந்த சமூகம்தான் நாம். ஆனால் இன்று யார் தமிழர் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கும் சமூகமாகிவிட்டோம். முதலில் எல்லாம் தமிழர்களின் தொன்மை எது, திருவள்ளுவரின் காலம் எது, என்பது போன்றுதான் கேள்விகள் இருந்தன. ஆனால் இன்று யார்,யார் தமிழன் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் மனநிலை:
இன்றைய தமிழ்ச்சமூகத்தில் தமிழர் என்ற அடையாளம் மையப் படுத்தப்படாமல், சாதி மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்குப் பகுத்தறிவு இல்லை என்பதல்ல. அவர்கள் வளர்ந்த சமூகச் சூழல், கற்றுக்கொடுக்கப்பட்ட விதம்தான் காரணம். அவர்களின் இளவயதில் சாதி, மத அடையாளங்கள் நன்றாகக் கற்பிக்கப் பட்டிருப்பதுதான் காரணம்.
தமிழருக்கான அடையாளம்:
அடையாளம் எங்கிருந்து வருகிறது? கிரெயிலாக் (Greylag Goose) என்ற ஒரு வாத்தினத்தில், புதிதாக பிறந்து ஒரு வாத்துக்குட்டி முதன் முதலில் எந்த விலங்கை காண்கிறதோ, அதுதான் அதன் தாய் என்று நினைத்து பின் செல்லுமாம். அது அதன் தாயின் அடையாளத்தை ஒருமுறைதான் பெரும், அதன்பின் அதை மாற்ற முடியாது. மனிதனும் தனது சமூக அடையாளம் ஓரளவு இதுபோன்றதுதான். ஒரு மனிதன் தனது சமூக அடையாளத்தை இளவயதில் வளரும்பொழுது பெறுகிறான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவன் வளர்ந்து பெரியவனான பின் அவனது அடையாளத்தை மாற்றுவது எளிதல்ல. தமிழர் என்ற அடையாளத்தை வளர்க்க எதுபோன்ற பள்ளிகள், சமூக அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என ஆராய வேண்டும்.
சரி தமிழர்கள் யார்?
இப்படி ஒரு சர்ச்சைக்குரியக் கேள்வியை தமிழகத்தை தவிர வேறு எங்கும் கேட்க இயலாது. பெரும்பான்மையாக குவியலாக வாழும் ஒரு தேசிய இனம் தனக்கான அதிகாரத்தை கூட பெற முடியாமல் தொடர்ந்து பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்களை அதிகாரத்தில் அமர வைத்து அவர்களிடம் அடிமையாய் வாழ்ந்து வருகிறது.
யார் தமிழர் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதானால் "காலங்காலமாய் மரபு வழியாக தமிழ் யாருக்கு தாய் மொழியோ அவரே தமிழர்" எனலாம்.
விளைவு:
தமிழ் மக்களின் மீதான அரசியல் அதிகாரத்திலும், அரசுத்துறைகளிலும், ஆன்மீக பண்பாட்டுத் துறைகளிலும் பெருவாரியாக மாற்று இனத்தை சேர்ந்தவர்களே கோலோச்சுவதால் தமிழர்களின் மெய்யியல் கேள்விக்குள்ளாகிறது. தமிழனின் பூர்வீகம் சர்ச்சைக்குள்ளாகிறது.
இந்தியாவில் வசிக்கும் பிற மொழி தேசிய இனங்களுக்கு அந்த மொழி சார்ந்தவர்கள் என்பதற்கு என்ன வரையறையோ அதுவேதான் தமிழர்கள் என்பதற்கான வரையறையும் கூட.அந்த வகையில் தாய்மொழியாக தமிழ் மொழியை கொண்டவர்கள் மட்டுமே தமிழர்களாகிறார்கள். மராத்தியையோ தெலுங்கையோ கன்னடத்தையோ தாய்மொழியாக கொண்டவர்கள் அந்த மொழி சார்ந்தவர்கள்.
தமிழன் வீரமணி

ஆக எவரெல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பார்கள்.இயல்பாகவே தமிழகத்தின் பூர்வீகக்குடி இனக்குழுவினர்தான் தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பார்கள். இவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் தான்.
முடிவு:சமூக அடையாளம் என்பது உலகில் மனிதர்கள் அனைவருக்கும் இயற்கையாக உருவாவது. அனைத்து நாடுகளும் அரசுகளும், குழுக்களும் அந்த அடையாளத்தை வளர்க்கின்றன பாதுகாக்கின்றன. அதுபோல நாமும் நமது அடையாளத்தை பாதுகாத்தல் தவறல்ல. ஆனால் பாதுகாக்கிறோம் என்று கூறி மக்களை அந்நியப்படுத்துவதோ இனவெறியில் ஈடுபடுவதோ தவறானது. நமது அடையாளத்தில் இணைந்துகொள்ள வருபவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வேறு அடையாளத்தைக் கொண்டவர்களுடன் ஒத்துழைத்து நட்பு பேணவேண்டும். மத சார்பற்ற முறையில் இயங்கவேண்டும். அதுவே நல்ல நெறி.
*வாழ்க தமிழ் _____வளர்க எம்மக்கள்*என்றும் அன்புடன்
தமிழன் வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக